இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது உரையில் இந்தியாவின் 'சாஃப்ட் பவர்' மற்றும் கச்சேரி பொருளாதாரத்தை (Concert Economy) உலக அளவில் மேம்படுத்த வலியுறுத்தினார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் துறையின் வளர்ச்சியைப் பற்றி பேசினார். குறிப்பாக, கச்சேரி பொருளாதாரம் (Concert Economy) குறித்துப் பேசிய அவர், தற்போது உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள் அனைவரும் இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவே விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் கலாச்சாரம், யோகா, ஆயுர்வேதம், திரைப்படங்கள் மற்றும் அனிமேஷன் போன்ற 'சாஃப்ட் பவர்' அம்சங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்படுவதாக அவர் கூறினார். இத்தகைய துறைகளை மேம்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க முடியும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.