உக்ரைனில் உள்ள இந்திய கோடீஸ்வரரின் தொழிற்சாலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலுக்கு உக்ரைன் ரஷ்யா மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

உக்ரைனில் நடந்து வரும் போரின் உச்சக்கட்டத்தில், அங்குள்ள இந்திய கோடீஸ்வரர் ஒருவரின் தொழிற்சாலை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் காரணமாக போர் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக, உக்ரைன் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ரஷ்யாவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.