சொமாட்டோ வசூலிக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணம் சந்தை ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்துவதல்ல என்று இந்தியப் போட்டி ஆணையம் (CCI) தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகாரை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

சொமாட்டோ நிறுவனம் வசூலிக்கும் கூடுதல் கட்டணங்கள் சந்தை ஆதிக்கத்தின் துஷ்பிரயோகம் என்ற புகாரை இந்தியப் போட்டி ஆணையம் (CCI) நிராகரித்துள்ளது. உணவு விலைகள் மற்றும் டெலிவரி கட்டணங்கள் குறித்து எழுந்த புகாரை ஆணையம் விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு, இந்த கட்டணங்கள் சந்தை விதிகளை மீறுவதாகவோ அல்லது நிறுவனத்தின் ஆதிக்கத்தைப் பயன்படுத்திப் பயனர்களைப் பாதிப்பதாகவோ இல்லை என்று CCI முடிவு செய்துள்ளது.