மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் அலுமினிய கேன்களின் விநியோகத்தை பாதித்துள்ளதால் இந்தியாவில் டயட் கோக் விலை உயர்ந்துள்ளது. இதனால் கோகோ கோலா நிறுவனம் புதிய வகை மற்றும் அதிக விலை கொண்ட கேன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் அலுமினிய கேன்களின் விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால் டயட் கோக்கிற்கான பேக்கேஜிங் முறையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு கோகோ கோலா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் தகவலின்படி, விநியோகத் தடைகள் காரணமாக இந்தியாவில் டயட் கோக் விலை 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட 300 மி.லி கேன்களுக்குப் பதிலாக, 50 ரூபாய்க்கு 330 மி.லி கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மில்லி லிட்டர் அடிப்படையில் சுமார் 13.6% விலை உயர்வாகும். தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பெரிய அளவிலான அலுமினிய கேன்களை இறக்குமதி செய்வதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.