சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2160 மற்றும் கிராமுக்கு ரூ.270 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் சரிவைச் சந்தித்துள்ளது.

சென்னையில் இன்று (ஜூலை 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. நேற்று (ஜூலை 23) தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

தங்கத்துடன் வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 240 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.