ரிவியன் நிறுவனத்துடனான வோக்ஸ்வேகன் கூட்டு முயற்சி குறித்த ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி பங்குகளைச் சந்தையில் முறையற்ற முறையில் வர்த்தகம் செய்ததாக வோக்ஸ்வேகன் பொறியாளர்கள் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மைக்கேல் ஸ்டாம்ப் மற்றும் மார்கஸ் பிளாங்க் ஆகிய இரு பொறியாளர்கள் மீது பத்திரங்கள் மோசடி செய்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இவர்கள் 'புராஜெக்ட் கிளைம்' எனப்படும் ரிவியன் மற்றும் வோக்ஸ்வேகன் இடையிலான கூட்டு முயற்சி குறித்த ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி ரிவியன் பங்குகளை வாங்கிள்ளனர்.
இந்தத் திட்டம் பொதுப்பார்வைக்கு வரும் முன்பே அவர்கள் பங்குகளை வாங்கியதால், அறிவிப்பு வெளியானவுடன் பங்கின் விலை உயர்ந்து அவர்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் 3,00,000 டாலருக்கும் அதிகமான சட்டவிரோத லாபத்தை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தங்கள் செயல்கள் சட்டவிரோதம் என்பதை அறிந்தே செயல்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.