இந்திய இரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் தட்டக்கல் டிக்கெட் முன்பதிவின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய டோக்கன் முறையை அறிமுகப்படுத்துகிறது. ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

தட்டக்கல் டிக்கெட் முன்பதிவின் போது கவுன்டர்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்டம் மற்றும் இடைத்தரகர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் புதிய 'டோக்கன்' முறையைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

புதிய விதிகளின்படி, ஏசி வகுப்பிற்கு ஒரு கவுண்டரில் அதிகபட்சம் 10 டோக்கன்களும், ஸ்லீப்பர் வகுப்பிற்கு அதிகபட்சம் 15 டோக்கன்களும் மட்டுமே வழங்கப்படும். ஏசி முன்பதிவு காலை 10 மணிக்குத் தொடங்கும் என்பதால், டோக்கன்கள் காலை 8:30 முதல் 9:00 மணிக்குள் வழங்கப்படும். ஸ்லீப்பர் முன்பதிவுக்காக காலை 9:30 முதல் 10:00 மணிக்குள் டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கன் பெற ஆதார் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அசல் அடையாள அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாகும்.