சாம்சங் செமிகண்டக்டர் பிரிவின் ஊழியர்கள் அதிக போனஸ் மற்றும் சலுகைகளுக்காக தங்களது போட்டியாளரான SK Hyneix நிறுவனத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர். AI தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த Talent War தீவிரமடைந்துள்ளது.
சாம்சங் செமிகண்டக்டர் பிரிவில் பணிபுரியும் பொறியாளர் லீ மற்றும் அவரது குழுவினர், சாம்சங்கை விட்டு வெளியேறி போட்டியாளரான SK Hyneix நிறுவனத்தில் சேர முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், AI ஆக்சிலரேட்டர்களுக்கான HBM சிப்களை தயாரிப்பதன் மூலம் கிடைத்த லாபத்தில், SK Hyneix தனது ஊழியர்களுக்கு 476,000 டாலர் வரை போனஸாக வழங்குகிறது. இது சாம்சங் வழங்கும் போனஸை விட மிக அதிகம்.
AI துறையின் எழுச்சியால் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு இடையே திறமையான ஊழியர்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. சாம்சங்கின் ஃபவுண்டிரி பிரிவில் பணிபுரிபவர்கள் குறைந்த போனஸ் பெறுவதால் அதிருப்தியில் உள்ளனர். சாம்சங் ஊழியர்களில் பெரும்பாலோர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு நிறுவனத்திற்கு மாற விரும்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த talent exodus சாம்சங்கின் சந்தைப் பங்கைப் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.