செமிகண்டக்டர் சிப் பங்குகளில் ஏற்பட்ட பெருமளவிலான விற்பனையால் தென்கொரியாவின் கோஸ்பி (KOSPI) குறியீடு 11 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. இதன் தாக்கம் ஜப்பான் மற்றும் தைவானிலும் எதிரொலித்துள்ளது.
தென்கொரிய பங்குச் சந்தையில் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கோஸ்பி (KOSPI) குறியீடு 11 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக எஸ்கே ஹைனிக்ஸ் (SK Hynix) மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற முன்னணி சிப் நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால் சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த வீழ்ச்சியின் தாக்கம் ஜப்பான் மற்றும் தைவான் சந்தைகளிலும் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) முதலீடுகள் குறையக்கூடும் என்ற அச்சமே இந்த உலகளாவிய விற்பனைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.