இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதன் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர எஸ்பிஐ முன்னாள் தலைமை பொது மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி (RBI) மூன்று மாதங்களுக்கு முன்பு Paytm பேமெண்ட்ஸ் வங்கி (PPBL) உரிமத்தை ரத்து செய்ததையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம் எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை பொது மேலாளர் (CGM) கிரிக்குமார் எம் நாயரை வங்கியைக் கலைப்பதற்கான அதிகாரப்பூர்வ லிகுயிடேட்டராக நியமித்துள்ளது.
வங்கியின் செயல்பாடுகள் டெபாசிட்டர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கருதிய ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரல் மாதம் இந்த உரிமத்தை ரத்து செய்தது. வங்கி நிர்வாகம் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.