E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் என்ஜின் சேதம் அல்லது மைலேஜ் குறையும் என்ற அச்சத்திற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

E20 பெட்ரோல் பயன்பாட்டினால் என்ஜின் சேதம் அல்லது மைலேஜ் குறையும் என்ற கவலைகளை எந்தவொரு அறிவியல் ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இத்தகைய அச்சங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் படிப்படியாக E20 பெட்ரோலை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக விரிவான அறிவியல் ஆய்வுகள், கள சோதனைகள் மற்றும் நிபுணர் குழுக்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. 2013-14 இல் 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு விகிதத்தை டிசம்பர் 2025க்குள் 20% ஆக உயர்த்துவதற்கான வரைபடம் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.