எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாட்டால் எரிபொருள் விலை கட்டுக்குள் இருப்பதாகவும், இல்லையெனில் லிட்டருக்கு ரூ.125 ஆக உயரும் என்றும் நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டது. எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாட்டால் எரிபொருள் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. ஒருவேளை எத்தனால் பயன்படுத்தப்படவில்லை என்றால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 125 ரூபாயைத் தொட்டிருக்கும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் சற்று குறையக்கூடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புக்கொண்டார். மேலும், BS-3 தர வாகனங்களில் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தும் போது சில ரப்பர் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.