ஆப்பிள் நிறுவனம் ஜூன் காலாண்டில் 109.4 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 16% அதிகம். இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் சந்தைகளில் அதிக வளர்ச்சி காணப்பட்டாலும், மெமரி சிப் விலையேற்றம் சவாலாக இருக்கலாம் என நிறுவனம் எச்சரித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஜூன் காலாண்டில் 109.4 பில்லியன் டாலர் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 16% வளர்ச்சியாகும். இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வளர்ந்து வரும் சந்தைகளில் இரட்டை இலக்கு வளர்ச்சியால் இந்த சாதனை கிடைத்துள்ளது. இருப்பினும், மெமரி சிப் விலையேற்றம் மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக அடுத்த சில காலாண்டுகளில் வணிக அபாயங்கள் இருக்கலாம் என்று நிறுவன அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா ஆப்பிளின் வருவாயில் முக்கியப் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும் அதே வேளையில், கிரேட்டர் சீனா (22.42%) மற்றும் ஐரோப்பாவில் (22.4%) அதிக வளர்ச்சி விகிதம் காணப்பட்டது. ஐபோன் விற்பனை 21.7% அதிகரித்து 54.25 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் மெமரி சிப் விலையேற்றத்தால் மேக்புக் மற்றும் ஐபேட் மாடல்களின் ஆரம்ப விலையை ஆப்பிள் 20% முதல் 42% வரை உயர்த்தியுள்ளது.