ஜெஃப்ரி எப்ஸ்டைனின் குற்றச் செயல்களை பெரிய வங்கிகள் கண்டுகொள்ளாமல் விட்டதாக அமெரிக்க செனட் ஜனநாயகக் கட்சி உறுப்பினரின் புதிய அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த வங்கிகள் பணமோசடி மற்றும் பாலியல் கடத்தலைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க செனட் நிதி குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ரான் வைடன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வால் வீட் வங்கிகள் ஜெஃப்ரி எப்ஸ்டைனின் முறைகேடான நடத்தைகளைத் தெரிந்தே புறக்கணித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எப்ஸ்டைன் தனது பாலியல் கடத்தல் கும்பலை இயக்குவதற்குத் தேவையான பெருமளவிலான பணத்தை எளிதாகப் பெற வங்கிகளின் இத்தகைய செயல்பாடுகள் வழிவகை செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

ஜேபி மோர்கன் சேஸ், டாய்ச் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற முன்னணி வங்கிகளின் பெயர்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பணமோசடி தடுப்புச் சட்டங்களை மீறி, பணக்கார வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க மட்டுமே இ வங்கிகள் பாலியல் கடத்தல் மற்றும் பணமோசடி குறித்த ஆதாரங்களை மறைத்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பேங்க் ஆஃப் அமெரிக்கா எப்ஸ்டைனுக்கான 170 மில்லியன் டாலர் பரிமாற்றத்தைப் பதிவு செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜேபி மோர்கன் சேஸ் நிர்வாகிகள் எப்ஸ்டைனுக்கு முறையான கணக்குகள் மூலம் பணத்தைப் பெறுவதற்குப் பதிலாக, ஷெல் நிறுவனங்கள் மூலம் மறைமுகமாகப் பணத்தை எடுப்பதற்கான வழிகளைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிக்கை கூறுகிறது. இந்தத் தகவல்கள் எப்ஸ்டைன் தொடர்பான குற்றவியல் விசாரணையில் முக்கியத் திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.