இந்தியாவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இது குறித்த காலக்கெடுவை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை ரிசர்வ் வங்கி (RBI) தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த நிதியாண்டிற்குள் இந்த புதிய வகை நோட்டுகளைச் சந்தைக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய காகித நோட்டுகளை விட இந்த பாலிமர் நோட்டுகள் அதிக ஆயுட்காலமும், நீடித்த உழைப்பையும் கொண்டவை. இது பணத்தின் பயன்பாட்டுச் சுழற்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.