கியூபிட் லிமிடெட் (Cupid Limited) பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளன. வெறும் 2 ரூபாயில் இருந்த பங்கின் விலை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தையில் மல்டிபேக்கர் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை வழங்குகின்றன. அந்த வகையில், கியூபிட் லிமிடெட் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அது கோடிக்கணக்கான ரூபாயாக மாறியிருக்கும்.
கண்டோம் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. 2021-ல் வெறும் 2.41 ரூபாயாக இருந்த இந்த பங்கின் விலை, தற்போது சுமார் 261 ரூபாயைத் தொட்டுள்ளது. இது சுமார் 10,779% லாபத்தை வழங்கியுள்ளது.