8-வது ஊதியக் குழுவின் பணிகள் இரண்டாம் கட்டத்திற்கு வந்துள்ளன. அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டங்கள் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை தீர்மானிக்கும்.
8-வது ஊதியக் குழு தற்போது அதன் 18 மாத காலப்பணியின் இரண்டாம் பாதியில் நுழைந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் மாதங்களில் ஓய்வூதியம், ஓய்வுக்காலப் பலன்கள் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய வசதிகள் குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெறும்.
நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த குழு, டெல்லியில் இருந்து தனது அடுத்தகட்ட ஆலோசனைகளைத் தொடங்க உள்ளது. தொடர்ந்து சென்னை, புதுச்சேரி, சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூரில் ஊழியர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழு தனது இறுதி அறிக்கையை மே அல்லது ஜூன் 2027-க்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவது மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ. 9,000-லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்துவது ஆகியவை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. மேலும், ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) குறித்த முடிவும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.