கோடீஸ்வர முதலீட்டாளர் பில் அகமனின் பெர்ஷிங் ஸ்கொயர் நிறுவனம், அதன் 50-க்கும் குறைவான ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வழங்குகிறது. ஊழியர்களின் விசுவாசத்தை அதிகரிக்க இந்த முறையை அவர் பின்பற்றுகிறார்.

பில் அகமனின் பெர்ஷிங் ஸ்கொயர் ஹெட்ஜ் ஃபண்ட், சுமார் $35 பில்லியன் சொத்துக்களை நிர்வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 48 ஊழியர்களில் ஒவ்வொருவரும் நிறுவனத்தின் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளனர். துப்புரவு பணியாளர்கள் முதல் வரவேற்பாளர்கள் வரை அனைவரும் இந்தச் சொத்தின் உரிமையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிச் சலுகைகள் மட்டுமல்லாமல், ஊழியர்களுக்கு நெகிழ்வான பணி நேரத்தையும் அகமனின் நிறுவனம் வழங்குகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான இடத்திலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி வசதிகளையும் நிறுவனம் வழங்குகிறது. இதன் விளைவாக, நிறுவனம் இதுவரை ஒரு ஊழியரையும் இழந்ததில்லை.