இந்தியாவின் மிக விலையுயர்ந்த பென்ட்ஹவுஸ் குருகிராமில் ₹271 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான மானவ் சர்தானா இந்த ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளார்.
இந்திய ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய உச்சமாக, நாட்டின் மிக விலையுயர்ந்த பென்ட்ஹவுஸ் குருகிராமில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன ஆடம்பர வீடு சுமார் ₹271 கோடிக்கு கைமாறியுள்ளது. மும்பைக்கு இணையாக குருகிராமிலும் தற்போது சொகுசு வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.
இந்த பிரம்மாண்ட வீட்டை ஆட்டோமொபைல் துறையின் முன்னணி தொழிலதிபரான மானவ் சர்தானா வாங்கியுள்ளார். அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட இந்த பென்ட்ஹவுஸ், இந்தியாவின் பிரீமியம் வீட்டு வசதி சந்தையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.