பங்குச்சந்தையில் புதிய முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டி. டீமேட் கணக்கு தொடங்குவது முதல் சொத்து ஒதுக்கீடு வரை நஷ்டத்தைத் தவிர்க்கும் முறைகள் குறித்து இங்கே காணலாம்.
பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்பவர்கள் சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம். டீமேட் கணக்கை முறையாகத் தொடங்குவது மற்றும் முதல் பங்குகளை வாங்குவதற்கான சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவது முதலீட்டுப் பயணத்தை எளிதாக்கும். குறிப்பாக 25 வயதிலேயே முதலீட்டைத் தொடங்குவது எதிர்கால நிதி இலக்குகளை அடைய உதவும்.
பணவீக்கத்தை எதிர்கொள்ளவும், போர்ட்ஃபோலியோவை பாதுகாக்கவும் கடன் பத்திரங்கள், ஈக்விட்டி மற்றும் தங்கத்தில் சரியான சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) செய்ய வேண்டும். நிபுணர்களின் ஆலோசனையின்படி திட்டமிட்டு முதலீடு செய்வதன் மூலம் சந்தை அபாயங்களைக் குறைக்க முடியும்.