இந்த வாரம் பங்குச்சந்தையில் 9 புதிய ஐபிஓ-க்கள் வெளியாகின்றன. மேலும் 8 நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் இந்த வாரம் ஐபிஓகளின் ஆதிக்கம் இருக்கும். மொத்தம் 9 நிறுவனங்கள் தங்கள் பொது பங்குகளை வெளியிட உள்ளன. இதில் தூத் டிரான்ஸ்மிஷன் மற்றும் மோல்பயோ டயக்னோஸ்டிக்ஸ் போன்ற நிறுவனங்களின் ஐபிஓ-க்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தொடர்ந்து, இந்த வாரத்தில் 8 நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன. சில ஐபிஓ-க்கள் பட்டியலிடப்படும் போதே நல்ல லாபத்தை (Listing Gain) தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் நிறுவனங்களின் நிதி நிலையை ஆய்வு செய்வது அவசியம்.