மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரெட் புல் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் எனர்ஜி டிரிங்கான 'ரெட் புல் டிராகன்பெர்ரி எனர்ஜைசர்' அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இது ஆகஸ்ட் 17 முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்.
மெக்டொனால்ட்ஸ் தனது மெனுவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர ரெட் புல் உடன் கைகோர்த்துள்ளது. இந்த புதிய பானம் ரெட் புல் சுவையுடன் ப்ளூ ராஸ்பெர்ரி சிரப் மற்றும் டிராகன்பெர்ரி துண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை குறைவாக விரும்புவோர் ரெட் புல் ஜீரோவை தேர்வு செய்யலாம்.
எனர்ஜி டிரிங்க் மட்டுமின்றி, மெக்டொனால்ட்ஸ் வெண்ணிலா ஸ்விர்ல் மற்றும் பல்வேறு புதிய சோடா வகைகளையும் அறிமுகப்படுத்துகிறது. இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் 'டர்ட்டி சோடா' மற்றும் புதிய பானங்களின் மூலம் வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.