பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர் தனது வேலையை இழந்த பிறகு, நிறுவனத்தின் லேப்டாப்பை ஒப்படைக்க தனது 2 வயது மகனுடன் அலுவலகத்திற்குச் சென்றார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தனது வேலையை இழந்தார். நிறுவனத்தின் லேப்டாப்பைத் திருப்பித் தருவதற்காக அவர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அவரது மனைவி வேலையில் இருந்ததால், 2 வயது மகனைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல், அவரோடு சேர்த்து அலுவலகத்திற்குச் சென்றார்.
அலுவலக நுழைவாயிலில் குழந்தையை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டதால் அவர் மிகுந்த சிரமத்திற்குள்ளானார். இறுதியில் ஒரு சக ஊழியரின் உதவியுடன் லேப்டாப்பை ஒப்படைத்தார். இந்த அனுபவத்தை 'ரெடிட்' தளத்தில் பகிர்ந்த அவர், வேலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
நிறுவனங்கள் ஊழியர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், வேலையை விட குடும்பமே முக்கியம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது கார்ப்பரேட் உலகம் மற்றும் பணி-வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது.