இந்தியா மற்றும் அமெரிக்காவின் பணி கலாச்சாரத்தை ஒப்பிட்டு ஒரு இந்திய ஊழியர் சமூக ஊடகத்தில் விவாதம் கிளப்பியுள்ளார். அமெரிக்க ஊழியர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் குறைந்த பணிச்சுமை இருப்பதாக அவர் கூறுகிறார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பணி கலாச்சாரம் (Work Culture) குறித்து சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. ஒரு இந்திய ஊழியர், ஒரே மாதிரியான பதவி மற்றும் பொறுப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்க ஊழியர்கள் இந்தியர்களை விட 3 முதல் 4 மடங்கு அதிக சம்பளம் பெறுவதாகக் கூறுகிறார். மேலும், அமெரிக்க ஊழியர்கள் ஒரே நேரத்தில் குறைவான திட்டங்களையே (Projects) கையாள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் ஒரு ஊழியர் அதிகபட்சமாக இரண்டு திட்டங்களை மட்டுமே கையாளுவார்கள், கூடுதல் பணி அளிக்கப்பட்டால் அதைத் தடையின்றி மறுக்க முடியும். ஆனால் இந்தியாவில், ஒரு ஊழியர் 3 முதல் 6 திட்டங்கள் வரை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், அமெரிக்காவில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதி அதிகம் உள்ள நிலையில், இந்தியாவில் வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.