அமெரிக்காவில் நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி அதிகரித்துள்ளது. டெஸ்லா CEO எலோன் மஸ்க், ஒரு சாதாரண ஊழியரை விட 25 லட்சம் மடங்கு அதிக வருமானம் ஈட்டியுள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பான AFL-CIO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 முதல் 2025 வரை நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி அதிகரித்துள்ளது. S&P 500 நிறுவனங்களின் CEO-க்கள் தங்களது சராசரி ஊழியர்களை விட 312 மடங்கு அதிக ஊதியம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையில் டெஸ்லா CEO எலோன் மஸ்க் மிகப்பெரிய அளவில் ஊதிய வேறுபாட்டைப் பெற்றுள்ளார். 2025 ஆம் ஆண்டில் மஸ்க் 158 பில்லியன் டாலர் ஈட்டினார், இது டெஸ்லாவின் சராசரி ஊழியரின் ஊதியத்தை விட 25 லட்சம் மடங்கு அதிகம். அதே சமயம், டெஸ்லாவின் வருவாய் 3 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்பக்ஸ் மற்றும் மெக்டொனால்ட்ஸ் போன்ற நிறுவனங்களிலும் இத்தகைய ஊதிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.