அமெரிக்காவின் சமீபத்திய அறிக்கையில் இந்தியா ஒரு 'நிழல் ரீசார்ஜ் நெட்வொர்க்கின்' (shadow transhipment network) அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பொருட்கள் வரி ஏய்ப்பு செய்ய மூன்றாம் நாடுகளின் வழியாகச் செல்வதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது.

அமெரிக்காவின் 'தி கிரேட் டிரான்ஷிப்மென்ட் ஸ்கேம்' என்ற அறிக்கையில், இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவின் தயாரிப்புகளின் உண்மையான பொருளாதாரத் தோற்றத்தை மறைக்க உதவும் ஒரு நிழல் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் 'Tier 1' பிரிவின் கீழ் வருகின்றன, அதாவது பெரிய அளவிலான வர்த்தகத்தின் உள்ளே சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படும் அபாயம் இங்கு அதிகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற முக்கிய மையங்கள் வழியாக சுமார் 67 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவிற்கு 28 பில்லியன் டாலர் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது வர்த்தக ஒப்பந்தங்களின் போது இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.