பாரிஸில் மூன்று பெண்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தான் அல்லாஹ்வின் கட்டளைப்படி இதைச் செய்ததாகக் கூறியுள்ளார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மூன்று பெண்கள் கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்துள்ளனர். பொது இடத்தில் நடந்த இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் தான் அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளார்.