குஜராத்தின் ஜாம்நகரில் கணவரைத் கொலை செய்து, உடலைத் தொழிற்சாலையில் புதைத்த மனைவி பிடிபட்டார். முன்னாள் காதலனுடன் சேர்ந்து இந்த கொடூரத் திட்டத்தை அவர் நிறைவேற்றியுள்ளார்.

குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஒரு மர்மமான கொலை வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்த உடலைத் தொழிற்சாலையின் தரைக்கடியில் 12 அடி ஆழத்தில் அவர்கள் புதைத்துள்ளனர். கடந்த 26 மாதங்களாகத் தனது கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகத் தனது குடும்பத்தினரை ஏமாற்றி வந்தவர், இறுதியில் காவல்துறையினரால் பிடிபட்டார்.