கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், குறைவான மதிப்பெண்கள் எடுத்ததற்காக ஒரு கணித ஆசிரியர் 12 வயது பழங்குடியின மாணவியை தடியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

நிலம்பூர் காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு 12 வயது பழங்குடியின மாணவி, தனது கணித ஆசிரியரால் தடியால் அடிக்கப்பட்டதில் பெருவிரலில் காயமடைந்துள்ளார். எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இந்த மாணவி, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக இந்தத் தண்டனைக்குள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி சோலனைகன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.