பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் 52 வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், உறவினர்கள் யாரும் வராததால் இந்த மரணம் வெளியில் தெரியாமல் போயுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு டூப்ளக்ஸ் வீட்டில் தக்ஷாயினி (52) என்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில் அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் வீட்டிற்கு வராததால், இந்த மரணம் குறித்து யாருக்கும் தெரியாமல் போயுள்ளது.
கணவர் மற்றும் மகனின் மரணத்திற்குப் பிறகு தக்ஷாயினி கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பாகலககுண்டே காவல் நிலைய போலீசார் அந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு நடத்தியபோதுதான் இந்த உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.