இமாச்சல பிரதேசத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது 6 வயது மகனை ஆற்றில் வீசியுள்ளார். காவல்துறையினர் மனைவியின் மொபைல் போனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 6 வயது மகனை ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு இந்த கொடூர செயலைச் செய்த அந்த நபர், பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, ஆற்றில் குழந்தையை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையின் பின்னணி மற்றும் இந்த தீவிர முடிவுக்கு வழிவகுத்த காரணங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.