ஹைதராபாத்தின் பஹாரி ஷெரிப் பகுதியில் நகை திருட நுழைந்த திருடன், நகைகளைத் திருடிய பிறகு மயக்க நிலையில் வீட்டின் தரையில் தூங்கிக் கொண்டிருப்பதை உரிமையாளர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
ஹைதராபாத்தின் வாதி-ஏ-முஸ்தபா பகுதியில் ஒரு வீட்டில் திருட நுழைந்த நபர், தங்க நகைகளைத் திருடிய பிறகு அங்கிருந்து தப்பியோடாமல், அதே வீட்டின் தரையில் ஆழ்ந்து தூங்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, அலமாரி திறந்திருப்பதையும் தரையில் ஒரு நபர் தூங்குவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் திருட வந்ததாகத் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் அந்த நபரின் வீடியோவையும் பதிவு செய்துள்ளனர்.
பஹாரி ஷெரிப் காவல் போலீசார் அந்த நபரைச் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.