ஜப்பான் கொடியுடன் பயணிக்கும் வணிகக் கப்பலில் கொச்சி இளைஞர் ஒருவர் மாயமானார். அவரைத் தேட அரசு தலையிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொச்சி அருகே நரக்கலில் வசிக்கும் ஷிண்டன் பென்னி என்ற இளம் மாலுமி, ஜப்பானைச் சேர்ந்த மிட்சுய் ஓ.எஸ்.கே லைன்ஸ் நிறுவனத்தின் கப்பலில் பயிற்சி பெற்று வந்தபோது காணாமல் போயுள்ளார். கடந்த புதன்கிழமை முதல் அவர் மாயமானதாக நிறுவனம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நரக்கல் காவல்துறையில் புகார் அளித்துள்ள குடும்பத்தினர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். எர்ணாகுளம் எம்பி ஹிபி ஈடன் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சகங்களின் உதவியை நாடுவதாக உறுதியளித்துள்ளார்.