டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்ததாகக் கூறப்படும் சிஐஎஸ்டிஎப் அதிகாரியைப் பணி இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது சிஐஎஸ்டிஎப் நிர்வாகம்.

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் ஒருவரைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி, சிஐஎஸ்டிஎப் ஏஎஸ்ஐ தர நிலை அதிகாரிக்கும் பயணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் பெண் பயணி அந்த அதிகாரியைத் திட்டியது காணப்படுகிறது.

புகைப்படங்களை எடுத்ததை அதிகாரி மறுத்தாலும், அவரது மொபைல் கேலரியில் அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் இருந்ததாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இது குறித்து சிஐஎஸ்டிஎப் உயர்மட்டத் தரப்பில் தீவிரமாகப் பார்க்கப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.