என்னூர் கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஆறு வயது சிறுவன் மோனிஷ் அதவ் டேங்கர் லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் சிறுவனின் தாயார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை அன்று பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மரியா மற்றும் அவரது ஆறு வயது மகன் மோனிஷ் அதவ் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். எண்ணூர் கடற்கரை சாலையில் பலகைத் தொட்டிகுப்பம் அருகே சென்றபோது, பின்னால் வந்த எண்ணெய் டேங்கர் லாரி மோதியதில் சிறுவன் கீழே விழுந்து லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். விபத்திற்குப் பின் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார்.
தொண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுரவாயலைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுந்தரவேலுவை கைது செய்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மரியா, அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.