மத்தியப் பிரதேசத்தில் ஜுஜார் போர் மற்றும் சிச்சோண்டா இடையே திட்டமிடப்பட்டுள்ள மூன்றாவது இரயில் பாதை, முக்கிய புலிகள் வழித்தடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட மண்டலத்தின் வழியாகச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்புரா மற்றும் மெல்காட் புலிகள் காப்பகங்களுக்கு இடையிலான முக்கிய புலிகள் வழித்தடம், புதிய இரயில் பாதை திட்டத்தால் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலையான குழு (SC-NBWL), மத்தியப் பிரதேசத்தில் இந்த மூன்றாவது இரயில் பாதைக்கான கொள்கை ரீதியான அனுமதியை பரிந்துரைத்துள்ளது.

இந்த 160.6 கிமீ நீளமுள்ள பாதை இரண்டு முக்கியமான புலிகள் வழித்தடங்கள் மற்றும் ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட மண்டலத்தின் வழியாகச் செல்லும். வனவிலங்குகள் பாதுகாப்பாகச் செல்வதற்குத் தேவையான மேம்பாலங்கள் போன்ற அறிவியல் ரீதியான கட்டமைப்புகளை உருவாக்குவது இந்தத் திட்டத்திற்கு நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.