மைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் சர்வரில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் சுவிட்சர்லாந்து அரசின் சுமார் 200 கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு கருதி பாதிக்கப்பட்ட கணக்குகளின் கடவுச்சொற்கள் மாற்றப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தின் தகவல் தொழில்நுட்பத் துறை (BIT), ஜூலை 28 அன்று ஷேர்பாயிண்ட் சர்வர்களில் அசாதாரண செயல்பாடுகளைக் கண்டறிந்தது. மைக்ரோசாப்ட் ஜூலை மாத இறுதியில் வெளியிட்ட பாதுகாப்புத் திருத்தங்களில் இருந்த குறைபாடுகளை ஹேக்கர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கணக்குகளின் லாகின் விவரங்கள் திருடப்பட்டதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், முக்கியமான தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று BIT தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக சர்வர்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.