சீனா மற்றும் அமெரிக்காவை விட முன்னணியில் இருக்க இந்தியா பிரான்சுடன் இணைந்து 6-வது தலைமுறை போர் விமானங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 114 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது.
சீன மற்றும் அமெரிக்காவின் ராணுவ வலிமையை எதிர்கொள்ள இந்தியா ஒரு மாபெரும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. பிரான்சுடன் இணைந்து அதிநவீன 6-வது தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதன் மூலம் உலக ராணுவ வரைபடத்தில் முன்னிலை வகிக்க இந்தியா இலக்கு வைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 114 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முன்மொழிவு வந்துள்ளது. இதில் டாடா, L&T, மஹிந்திரா மற்றும் HAL போன்ற இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். ரஷ்ய விமானங்களை விட பிரான்சின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இந்தியாவின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.