பிரான்ஸ் ரஃபேல் போர் விமானங்களின் முக்கிய தொழில்நுட்பக் குறியீடுகளை (Source Code) பகிர மறுப்பதால், இந்தியாவுடன் மேற்கொள்ளவிருக்கும் 114 ரஃபேல் ஒப்பந்தம் சிக்கலில் உள்ளது. இது இந்தியாவின் தொழில்நுட்பத் தன்னாட்சியைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
பிரான்ஸ் ரஃபேல் திட்டத்தில் சர்வதேச பங்காளர்களை விரும்பினாலும், அதன் முக்கிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறது. குறிப்பாக, RBE2 AESA ரேடார், MDPU மிஷன் கம்ப்யூட்டர் மற்றும் SPECTRA எலக்ட்ரானிக்-வார்ஃபேர் சூட் ஆகியவற்றின் சோர்ஸ் கோடை வழங்க பிரான்ஸ் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில்நுட்பங்களே விமானத்தின் டிஜிட்டல் கட்டமைப்பிற்கும், உயிர்வாழும் திறனுக்கும் மிக முக்கியமானவை.
இந்தத் தொழில்நுட்பக் குறியீடுகள் கிடைக்காவிட்டால், வருங்காலத்தில் இந்திய விமானப்படை தனது சொந்த ஏவுகணைகளை (உதாரணமாக அஸ்த்ரா) இணைப்பதற்கும் அல்லது விமானத்தைப் புதுப்பிப்பதற்கும் பிரான்ஸின் அனுமதியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ரஷ்யாவின் Su-57E விமானங்களின் தொழில்நுட்பத்தை வழங்க முன்வந்திருப்பது, இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குப் கூடுதல் பலத்தைத் தருகிறது. தொழில்நுட்பக் கட்டுப்பாட்டைப் பாதுகாக்க பிரான்ஸ் எடுக்கும் முயற்சி, 114 ரஃபேல் ஒப்பந்தத்தை இழக்க வழிவகுக்கலாம்.