தெற்கு டெல்லியின் மதன்பூர் கதாரில் மழைநீர் நிரம்பிய கால்வாயைக் கடக்கும்போது 18 வயது அங்கித் குமார் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
அங்கித் குமார் சமீபத்தில் நொய்டாவில் ஒரு தனியார் வேலையில் சேர்ந்திருந்தார். ஆகஸ்ட் 7 அன்று மாலை வேலை முடிந்து திரும்பும் போது, தெற்கு டெல்லியின் மதன்பூர் கதாராவில் மழைநீர் நிரம்பிய கால்வாயைக் கடக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தனது தந்தைக்கு “நான் விரைவில் வீட்டிற்கு வருவேன்” என்று அவர் கூறியதுதான் அவரது கடைசி வார்த்தைகளாக அமைந்தது.
சுமார் 24 மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சனிக்கிழமை மாலை ஆக்ரா கால்வாய் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பாலம் வழியாகக் கடக்கும்போது அவரது கால் கால்வாயின் வேகமான நீரோட்டத்தில் சிக்கியதாகத் தெரிகிறது. இந்த விபத்து குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகள் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.