தேர்வு சுழற்சி மாற்றத்தினால் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்காக ICAI மீண்டும் விண்ணப்பக் காலத்தைத் தொடங்கியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), நவம்பர் 2026 CA இறுதித் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் window-வை ஒரு சிறப்பு நடவடிக்கையாக மீண்டும் திறந்துள்ளது. தேர்வு முறையிலான மாற்றத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5 இரவு 11:59 மணி வரை SSP போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி eservices.icai.org தளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும். மேலும், விலக்குகள் (Exemptions) தொடர்பான சேவைகளை எளிதாக்க புதிய ஆன்லைன் வசதியையும் ICAI அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி செப்டம்பர் 30, 2026 வரை கிடைக்கும்.