வல்வில் ஓரி விழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் 08.08.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும்.
சங்க காலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும் கொடைத்தன்மையையும் போற்றும் வகையில், ஆடி மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 08.08.2026 (சனிக்கிழமை) அன்று அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவும், கலாச்சார விழுமியங்களை போற்றவும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த விடுமுறை 1881 வருட செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வழக்கம்போல் இயங்கும். மாவட்ட கருவூலங்கள் அவசரப் பணிகளுக்காக குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும்.