UGC-NET, ICAR மற்றும் CSIR தேர்வுகளின் விடைக்குறிப்புகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். NTA நிறுவனம் முறையான பதில் அளிக்காமல் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜூன் 2026 UGC-NET தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் விடைக்குறிப்பு மற்றும் முடிவுகளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர். வழக்கமாக சில நாட்களிலேயே வெளியிடப்படும் விடைக்குறிப்புகள், இந்த முறை நீண்ட தாமதத்தால் வெளியாகவில்லை. மாணவர்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, முறையான தகவல் ஏதுமில்லை என்றும் காத்திருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாமதத்தால் PhD சேர்க்கை தேதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து தனியார் பல்கலைக்கழகங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் ICAR மற்றும் CSIR-NET தேர்வுகளிலும் விடைக்குறிப்புகள் வெளியாகாதது மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.