உடல் குறைபாடுகளைக் கடந்து, 13 வயது லட்சுமி தனது கால்களைப் பயன்படுத்தி எழுதுவதன் மூலம் கல்வியைத் தொடர்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும் இவரது விடாமுயற்சி இணையதளத்தில் பலரையும் வியக்க வைக்கிறது.
பீகாரைச் சேர்ந்த 13 வயதான லட்சுமி, உடல் ரீதியான சவால்களுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடரத் துணிந்துள்ளார். நான்காம் வகுப்பு படிக்கும் இவர், தனது பள்ளிப் பையைத் திறப்பது முதல் நோட்டுப் புத்தகங்களைப் பயன்படுத்துவது மற்றும் எழுதுவது வரை அனைத்தையும் தனது கால்களைக் கொண்டே மிகத் திறமையாகச் செய்கிறார்.
அவரது அன்றாடச் செயல்பாடுகளைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் லட்சுமி, சவால்களைத் தாண்டித் தனது கல்வியில் கவனம் செலுத்துவது பலருக்குப் பெரும் ஊக்கமளிக்கிறது. அவரது விடாமுயற்சியைப் பாராட்டி சமூக வலைதளப் பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.