ஜானி டெப் தனது புதிய படமான 'எபெனேசர்' மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார். டி வெஸ்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 'ஏ கிறிஸ்மஸ் கரோல்' கதையின் மறுவடிவம்.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தனது புதிய படமான 'எபெனேசர்'-ன் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். இதில் அவர் ஸ்க்ரூஜ் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி வெஸ்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சார்லஸ் டிக்கன்ஸின் 'ஏ கிறிஸ்மஸ் கரோல்' கதையை அடிப்படையாகக் கொண்டது.
சமீபத்தில் கமிகான் (Comic-Con) நிகழ்வில் ஜானி டெப்பின் திடீர் வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் அவரது ஹாலிவுட் மறுமலர்ச்சியாகக் கருதப்படுகிறது.