லண்டன் இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் ஒரு இசை தயாரிப்பாளர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கிராமி வெற்றியாளர் கிறிஸ் பிரவுன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

லண்டனின் சவுத்வொர்க் கிரவுன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, 37 வயதான கிறிஸ் பிரவுன் லண்டன் நைட் கிளப்பில் ஏற்பட்ட மோதலில் 'அப்ராய்' (affray) குற்றத்தை ஒப்புக்கொண்டார். முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் நடந்த இந்த கொடூரமான தாக்குதல் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வந்தார். ஆனால், தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், தாக்குதல் மற்றும் ஆயுதம் வைத்திருந்ததற்கான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு திரும்பப் பெற்றுக்கொண்டது.

இந்த மோதலில் பிரவுனின் நண்பரும் குரல் பயிற்சியாளருமான ஓமோலூலு அகின்லோலுவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேஃபேர் பகுதியில் உள்ள ஒரு கிளப்பில் கண்ணாடி பாட்டிலை ஆயுதமாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பிரவுன் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார், மேலும் அக்டோபர் 26 அன்று அவருக்குத் தண்டனை அறிவிக்கப்படும்.