நிக்கோலஸ் கேஜ் நடித்த 'ஃபோர்டிடியூட்' என்ற வெளியாகாத போர் த்ரில்லர் படத்தின் ஹார்ட் டிரைவ் திருடப்பட்டதை அடுத்து, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் மீது 105 மில்லியன் டாலர் மதிப்பிலான வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸின் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்திலிருந்து ஹார்ட் டிரைவ்கள் திருடப்பட்ட சம்பவத்தில், அந்த நிறுவனத்தின் மீது 105 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஹார்ட் டிரைவ்களில் நிக்கோலஸ் கேஜ் நடித்த 45 மில்லியன் டாலர் பட்ஜெட் கொண்ட 'ஃபோர்டிடியூட்' என்ற போர் த்ரில்லர் படமும் அடங்கும்.
படத் தயாரிப்பாளர்கள் நெட்ஃபிளிக்ஸ் பாதுகாப்பில் தவறியதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தத் திருட்டைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தாலும், காவல்துறையைத் தொடர்பு கொள்வதில் நெட்ஃபிளிக்ஸ் காட்டிய அலட்சியம் புகாராக உள்ளது. இதனால் படத்தின் சர்வதேச வெளியீடு மற்றும் விருதுக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளன.
'ஃபோர்டிடியூட்' திரைப்படம் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் லண்டனில் நடக்கும் ஒரு உளவுத் திரைப்படமாகும். இதில் நிக்கோலஸ் கேஜ், மேத்யூ குட் மற்றும் பென் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இதனை சைமன் வெஸ்ட் இயக்கியுள்ளார்.