ஈரான் போரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 'ஆர்வமான பங்களிப்பை' கிண்டல் செய்யும் வகையில் 10 அடி உயர தங்கக் கோப்பை நியூயார்க்கில் தோன்றியுள்ளது.
நியூயார்க்கின் ஃபோலி சதுக்கத்தில், ஈரான் போரில் டொனால்ட் டிரம்பின் 'ஆர்வமான ஈடுபாட்டை' கிண்டல் செய்யும் வகையில் 10 அடி உயர தங்கக் கோப்பை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமெரிக்க அதிபரை அரசியல் ரீதியாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.
'சீக்ரெட் ஹேண்ட்சேக்' என்ற அநாமதேய கலைக் குழுவினர் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர். இது தற்போது நியூயார்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.