அசாம் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரன்பீத் ஹூடா களமிறங்கி உதவி செய்து வருகிறார். அவர் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் குடிநீரை கொண்டு சேர்த்து வருகிறார்.

அசாமில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழலில், நடிகர் ரன்பீத் ஹூடா ஒரு மீட்பராக செயல்பட்டு வருகிறார். அவர் உலகளாவிய சீக்கிய தன்னார்வலர்களுடன் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் சுத்தமான குடிநீரை நேரடியாக விநியோகித்து வருகிறார்.

தன்னுடைய குழுவுடன் சேர்ந்து, படகுகள் மூலம் கடினமான பகுதிகளுக்குச் சென்று அவர் உதவி செய்து வருகிறார். பத்து நாட்களுக்குப் பிறகும் பல இடங்களில் மண்டியளவு நீர் தேங்கியுள்ளதாகவும், பல குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உணவு மற்றும் சமையல் உபகரணங்களை அவர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.