நியூசிலாந்து நடிகர் சாம் நீல் கடந்த மாதம் தனது 78 வயதில் காலமானார். அவர் இறப்பதற்கு முன்பாக பிரபலமான வீடியோ கேம் அடிப்படையிலான 'லெஜண்ட் ஆஃப் செல்டா' திரைப்படத்தில் தனது பணிகளை முடித்துள்ளார்.
டெட்லைன் அறிக்கையின்படி, சாம் நீல் இந்த நேரடித் திரைப்படத்தில் நடித்துள்ளார், இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரலில் நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு மே மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் 'ஹைருல் மன்னராக' இருக்கலாம் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
சாம் நீல் 'காட்ஜில்லா எக் காங்: சூப்பர்நோவா' மற்றும் 'தி லாஸ்ட் ரிசார்ட்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 1986 இல் நிண்டெண்டோ வெளியிட்ட லெஜண்ட் ஆஃப் செல்டா தொடரின் முதல் திரைப்படமாக இது அமைகிறது. வெஸ் பால் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.